யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிப்பணித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு.

யூனியன் பிரதேசங்களின் பல்வேறு வளர்ச்சிப்பணித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். புதுதில்லியில் இதற்கென நடைபெற்ற கூட்டத்தில், அதிநவீன நகரங்கள் திட்டம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் புத்துயிரூட்டல் மற்றும் நகர மாற்றத்திற்கான அடல் இயக்கத் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது. யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து அவற்றில் இருந்து வந்திருந்த உயர் அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

Pin It