ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை  – மத்திய அமைச்சரவை முடிவு.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுதில்லியில் நேற்று பிரதமர் திரு நரேந்திர  மோதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தகுதியுடைய ரயில்வே ஊழியர்களுக்குத் தலா 17,951 ரூபாய் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். திறன்  மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களை இணைப்பதற்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

Pin It