ரயில்வே பாதுகாப்புப் படையில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு – ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அத்துறைக்கான அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பட்னாவில் பல்வேறு ரயில் திட்டங்களை அவர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ரயில்வே பாதுகாப்புப் படையில் 10 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத் தன்மையைப் பராமரிக்கும் வகையில் நடவடிக்கைள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முக்கிய ரயில்கள் மற்றும் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்தார். ராக்சுவல் – நராகத்தியாகஞ்ச் இடையேயான அகல ரயில் பாதை மற்றும் பயணியர் ரயில் சேவையையும் அவர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ரயில் பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு திட்டங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Pin It