ரஷ்யாவுக்கென பணிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு  – எஃப்பிஐ புலனாய்வு, தம்மை அவமதிப்பதாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  கருத்து.

ரஷ்யாவுக்கென  ரகசியமான பணிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, எஃப்பிஐ மேற்கொண்டுள்ள புலனாய்வு, தம்மை அவமதிப்பதாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நவீனகால வரலாற்றில் எந்வொரு அமெரிக்க அதிபரும் கடைபிடிக்காத கடுமையான போக்கை ரஷ்யாவுக்கு எதிராகத் தாம் கடைபிடித்து வருவதாகக் கூறினார். 2017-ல் அதிபர் டிரம்ப் தனது நாட்டிற்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆதரவாக ரகசியமான பணியாற்றினார் என்பது குறித்து எஃப் பி ஐ விசாரித்து வருவதாக செய்தித் தாள்களில் வந்த அறிக்கை குறித்து அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

Pin It