ரஷ்ய அதிபர் திரு விளாடிமீர் புட்டின், வடகொரிய அதிபர் திரு கிம் ஜோங் உன் இன்று  சந்திப்பு.

ரஷ்ய அதிபர் திரு விளாடிமீர் புட்டினை, வடகொரிய அதிபர் திரு கிம் ஜோங் உன் இன்று சந்தித்துப் பேசுகிறார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்தையை முன்னிட்டு, திரு கிம் ஜோங் உன் ரயில் மூலம் அங்கு சென்றடைந்துள்ளார்.

கொரிய தீப கற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் இருவரும் பேச்சு நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரிய அதிபர் திரு கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

Pin It