ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் – வர்த்தக அமைச்சர் திரு சுரேஷ் பிரபு.

ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் திரு சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும் ரஷ்யாவும் வர்த்தகத்தை அதிகரிக்க, ரஷ்யாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் அவர் பங்கேற்றபோது, அந்நாட்டின் வர்த்தக அமைச்சருடன் திரு சுரேஷ் பிரபு பேச்சு நடத்தினார்.

Pin It