ரஷ்ய விமானத் தாக்குதலில் 24 சிரிய சிவிலியன் மக்கள் கொல்லப்பட்டனர்.

கிழக்கு சிரியாவில் ஐ எஸ் வசமிருந்த கிராமம் ஒன்றில் நேற்று ரஷ்யா நடத்திய விமான தாக்குதலில் 24 சிவிலியன் மக்கள்  கொல்லப்பட்டனர்.  இந்தத் தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள், 4 பெண்கள் அடங்குவார் என்று அது கூறியுள்ளது.  சிரியா நாட்டின் டேர் எஜார் மாகாணத்தில் பெரும் பகுதியை ஐ எஸ் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.  அந்நாட்டின் எட்டு சதவீதம் பகுதி தவிர இதர இடங்களிலிருந்து ஐ எஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.

Pin It