ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தலில் 74 சதவீத வாக்குப் பதிவு.

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகளும், தெலுங்கானாவில் 67 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் 187 பெண்கள்  உட்பட, 2,274 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தெலங்கானாவில் 139 பெண்கள் உட்பட, 1,821 வேட்பாளர்கள்  தேர்தலில் போட்டியிட்டனர். ஏற்கனவே, 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசம், 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது.  90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள்  வரும்  11 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Pin It