ரெக்ஸ் டில்லர்சன் பதவி நீக்கம்

அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு ரெக்ஸ் டில்லர்சனை அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

தற்போது திரு டில்லர்சன் ஆப்பிரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதிபர் டிரம்ப், சிஐஏ-யின் இயக்குநர் திரு மைக் பாம்பியோ புதிய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறியுள்ளார்.

எனினும், இந்த நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்த வேண்டும்.

65 வயதான திரு டில்லர்சன் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சிஐஏ-யின் துணை இயக்குநர் திருமதி கீனா ஹாஸ்பல் இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனிடையே, திரு ரெக்ஸ் டில்லர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி திரு ஸ்டீவ் கோல்ட்ஸ்டீன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Pin It