ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி தனது அனைத்து முக்கியக் கொள்கை வீதங்களை எவ்வித மாற்றமின்றித் தொடர்வதாக அறிவித்தது.  நேற்று வெளியான வங்கியின் ஐந்தாவது இரண்டு மாதப் பணக்கொள்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இதர வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி வீதம் ரெப்போ ரேட்ஸ் 6 புள்ளி 5 சதவீதமாகவும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்கும் தொகைகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதமான ரிவர்ஸ் ரெப்போ ரேட்ஸ் 6 புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாகவும் தொடரும்.        பொதுவான வங்கி வட்டி வீதங்கள் 6 புள்ளி ஏழு ஐந்து சதவீதமாக தொடரும்.   ஆர்பிஐ ஆளுநர் திரு உர்ஜித் பட்டேல் தலைமையிலான ஆறு உறுப்பினர் பணக் கொள்கைக் குழு இந்த வீதங்களை அப்படியே தொடர்வதற்கு முடிவு செய்தது.

Pin It