ரோஹிங்யா விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் கண்டனத்திற்கு இந்தியா வருத்தம்.

ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் ஹை கமிஷனர், இந்தியாவுக்குள் நுழைந்த ரோஹிங்யா அகதிகளைத் திருப்பியனுப்ப இந்தியா எடுத்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, நேற்று, பதிலளித்த, ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, சையத் அக்பருதீன் அவர்கள், இந்தியா, சட்ட நியதிகளை நிலைநிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளை, மனிதாபிமானமற்ற செயலாக, தவறாக எடை போடக்கூடாது என்றும், பயங்கராவாதம் பிரதானமாக விளங்குவதை ஐ.நா. கவனிக்கத் தவறியது வருந்தத் தக்கது என்றும் கூறினார். இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக விளங்கக் கூடிய, சட்ட விரோதமான நுழைவுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மனிதாபிமானம் குறித்த மதிப்பீடுகள், அரசியலுக்கு வசதியான விவகாரமாக்கப் படக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார். மனிதாபிமானம் குறித்த இலக்குகளை எட்ட, பற்றற்ற பரிசீலனை, சமநிலை முடிவுகள் மற்றும் உண்மைகளை உறுதிப்படுத்துதல் ஆகியவை அவசியம் என்று அவர் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

Pin It