லக்னோவில் ’ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி’ உச்சி மாநாடு – குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று தொடக்கம்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்,  உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ’ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி’ உச்சி மாநட்டை இன்று தொடங்கி வைக்கிறார். சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த  3 நாள் மாநாடு நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொருளை உற்பத்தி செய்வதன் மூலம், இந்த்த் தொழில்களுக்குப் புத்துயிர் ஊட்ட இந்த்த் திட்டம் வகை செய்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ்,  பயனாளிகளுக்கு, 1,006 கோடி ரூபாய்க்கான கடன் அனுமதி ஆவனங்களை குடியரசுத் தலைவர் வழங்குகிறார். 3 மாவட்டங்களைச் சேர்ந்த 78 தொழில் முனைவோர்  மற்றும் கைவினைஞர்களுக்கு தொழில் உபகரணங்களையும் அவர் இந்த நிகழ்ச்சியில் வழங்குகிறார். வாரணாசி, கோரக்பூர், மொரதாபாத், ஆக்ரா, கான்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்கள் தங்களது அனுபவங்களை இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்கின்றனர்.

Pin It