லிபியாவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வெளியுவுத்துறையின் 17 அதிகாரிகள்  ஈடுபடுவர் – வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ்.

லிபியாவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணியில் வெளியுவுத்துறையின் 17 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவர், விசா முடிவடைந்த நிலையில் அங்கு தங்கியிருப்பவர்களும் லிபியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார். லிபியா விமான நிலையம் செயல்பாட்டில் உள்ள நிலையில், இந்தியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாய்நாடு திரும்புமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த வாய்ப்புக்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Pin It