லூபன் புயல்: நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 130 பேரை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

 

லூபன் புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 130 பேரை இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். பல்வேறு கப்பல்களை சேர்ந்த 130 மாலுமிகள் ஓமன் துறைமுகத்தில் சிக்கியிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  ஓமன் கடற்படையும் இதற்கு உதவி புரிந்ததாக குஜராத் மாநில அரசின் செய்திக்குறிப்பு   தெரிவிக்கிறது.

குஜராத் மாநில அரசு விடுத்த வேண்டுகோளை அடுத்து, கடற்படை அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. அம்மாநில முதலமைச்சர் திரு விஜய் ரூபானி மத்திய அரசிடமும், கடற்படையினரிடமும் தொடர்பு கொண்ட இவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It