வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்  கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்  கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு பாலச்சந்திரன் கூறியுள்ளார். சற்றுமுன் எமது செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்த அவர், இது மேலும் வலுவடைய வாய்ப்பு  உள்ளதாகவும் தெரிவித்தார்.  நாளை தொடர்ந்து அது  புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த புயல் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்  வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள்  உடனடியாக  கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Pin It