வங்கிக் கணக்கு தொடங்க, தத்கால் பாஸ்போர்ட் பெற , ஆதார் அவசியம் – ஆதார் ஆணையம்

வங்கி கணக்கு தொடங்குவதற்கும் தட்கால் பாஸ்போர்ட் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என்று இந்தியா தனி நபர் அடையள ஆணையம் கூறியுள்ளது.  வங்கி கணக்குகள் மற்றும் பானுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நேற்று நீட்டித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் தட்கால் பாஸ்போர்ட் விண்ணபிப்பதற்கும் ஆதார் எண்ணின் அவசியம் சட்டப்படி தொடரும் என தனிநபர் அடையாள ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எனினும் ஆதார் இல்லாதவர்கள் உடனடியாக அதனை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இந்த விண்ணப்ப எண்ணைப் புதிய வங்கிக் கணக்கு தொடங்கும்போதும் தட்கால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போதும் அளிக்கலாம் என்று இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது

Pin It