வங்கி, காப்பீடு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய  அரசு ஊக்கமளித்து வருகிறது – குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்.

வங்கி, காப்பீடு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய  அரசு ஊக்கமளித்து வருவதாக குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற சேவை தொடர்பான சர்வதேச கண்காட்சியில் பேசிய அவர்,  நாட்டின் வளர்ச்சி வீதம் நடப்பாண்டில் 7.4 சதவீதம் இருக்கும் என்றும் சேவைத்துறை இதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் சர்வதேச நிதியமைப்பு கணித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு சுரேஷ்பிரபு, வரும் காலத்தில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நாட்டின் பொருளாதார நிலை இருக்கும் என்றும் இதில் சேவைத்துறையின் பங்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும் கூறினார்.

Pin It