விம்பிள்டன் டென்னிஸ் – ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்துக்கு கெவின் ஆண்டர்சன் தகுதி.

நேற்றிரவு நடைபெற்ற, சாதனை படைத்த அரையிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வென்று, ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சன். 6 மணி, 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அவர் ஜான் இஸ்னரை 7-6,6-7,6-7,6-4, 26-24 என்ற செட் கணக்கில், கடுமையாகப் போராடி வென்றார். 1921 ஆம் ஆண்டில், பிரையன் நார்ட்டன் எட்டிய சாதனைக்குப் பிறகு, விம்பிள்டன் போட்டிகளில் இறுதியாட்டத்தை எட்டிய முதல் தென்னாப்பிரிக்க வீரராக கெவின் ஆண்டர்சன் விளங்குகிறார். முன்னதாக, அமெரிக்க ஒப்பன் போட்டிகளில், இறுதியாட்டத்தில், ரஃபேல் நடாலிடம் அவர் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டம், ரஃபேல் நடால், நோவாக் டோகோவிச் ஆகியோருக்கிடையே, தடங்கலுக்குப் பின், இன்று, பெண்களுக்கான இறுதிப் போட்டிக்கு முன்னதாக, தொடரும். 6-4 3-6 7-6 என்ற செட் கணக்கில், டோகோவிச் முன்னிலையில் உள்ளார்.

Pin It