வெனிசுலாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ்.

வெனிசுலா நாட்டில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய அமெரிக்கா துணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். வெனிசுலாவில் எதிர்கட்சித் தலைவர் திரு ஜூவான் கைடோ, தன்னைத் தானே  இடைக்கால அதிபராக அறிவித்துக்  கொண்ட பின்பு, உள்நாட்டு சிக்கல் அங்கு தீவிரமாகியுள்ளது.

Pin It