வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்கள் மற்றும் ஐநா அமைப்புகள் ஜிஎஸ்டி வரிப்பணத்தைத் திரும்பப் பெற சரியான விண்ணப்பம் கோரல்.

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்கள் மற்றும் ஐநா அமைப்புகள் தாங்கள் செலுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப் பெறுவதற்குப் பொருத்தமான விண்ணப்பத்தை அனுப்புமாறு நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகஙகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கி அவர்கள் செலுத்தி உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப் பெற்றுக்கொள்ள ஜி எஸ் டி சட்டம் வழிவகுக்கிறது. ஏற்கனவே வெளிநாட்டு தூதரக அலுவலங்கள் சரக்கு மற்றும் சேவை வரியைத் திரும்பப் பெறுவதற்காக அனுப்பிய விண்ணப்பங்களில் குறைபாடுகள் இருந்ததாக வருவாய்த் துறையினர் தெரிவித்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தவறான விண்ணப்பம் காரணமாகவே அவர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியைத் திரும்ப அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் நிதியமைச்சம் கூறியுள்ளது.

 

Pin It