வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவுடன் சந்திப்பு.

ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் திரு ரவீஷ்குமார் கூறியுள்ளார். ரஷ்யா செல்லும் வழியில்,  துர்க்மெனிஸ்தான் சென்ற திருமதி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் திரு ரஷித் மெரேதோவை விமானநிலையத்தில் சந்தித்துப் பேசினார். மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா – ரஷ்யா அரசுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆணையத்தின் 23 ஆவது கூட்டத்திற்கு திருமதி சுஷ்மா சுவராஜூம், ரஷ்ய துணை பிரதமர் திரு யுரிபோரிசோவும் இணைந்து தலைமை ஏற்கின்றனர்.

Pin It