ஷெட்யூல்ட் வகுப்பினர்  மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டதிருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்.

ஷெட்யூல்ட் வகுப்பினர்  மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டதிருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது. ஷெட்யூல்ட் வகுப்பினர்  மற்றும் பழங்குடியினருக்கான உரிமைகள்  மற்றும் நீதியை நிலைநாட்டும் நோக்கில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் புதிய திருத்தத்தின்படி, எஸ்.சி/எஸ்.டியினருக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை. மாநிலங்களவையில்  மசோதா மீது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய சமூகநீதித்துறை  அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட், ஏழை எளிய மக்கள் மற்றும் ஷெட்யூல்ட் வகுப்பினரின்  நலனைக் காக்க  அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Pin It