ஷெரீஃப்புக்கு எதிரான வழக்கில் குழப்பமான இரு தீர்ப்புகள்

பாகிஸ்தானின் பிஎம்எல்-என் கட்சியின் தலைவர் திரு நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒருமித்த முடிவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று, நவாஸ் ஷெரீஃப்பின் மறுஆய்வு மனுவை விசாரிக்கும் குழுவின் தலைவரான நீதிபதி ஆசீஃப் சயீது கோஷா தெரிவித்துள்ளார்.

எனினும் ஷெரீஃப்புக்கு எதிரான ஊழல்  வழக்கில் ஏப்ரல் 20ஆம் தேதியும், ஜூலை 28ஆம் தேதியும் இரண்டு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  நீதிபதி கோஷா, நீதிபதி குல்சார் ஆகியோர் ஏப்ரல் 20ஆம் தேதி ஷெரீஃப்பைத்  தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். ஆனால் இந்த அமர்வின் அடுத்த 3 நீதிபதிகள் மேலும் விரிவான விசாரணை வேண்டும் என்று கூறி கூட்டுப் புலனாய்வுக்  குழு அமைக்க உத்தரவிட்டனர்.

Pin It