ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் பயன்படுத்திய சக்கர நாற்காலி  – லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை.

மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் பயன்படுத்திய சக்கர நாற்காலி லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 93 ஆயிரம் டாலருக்கு விற்பனையானது. அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏழு லட்சத்து 67 ஆயிரம் டாலருக்கு விற்பனையானது. லண்டனில் இணையதளம் வாயிலாக இந்த ஏலம் நடைபெற்றது.

புகழ்ப்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹhக்கின்ஸ் தனது 22 ஆவது வயதில் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால்  பாதிக்கப்பட்டார்.  எனினும், இந்தப் பின்னடைவைப் பொருட்படுத்தாமல் 76 வயது வரை உயிர் வாழ்ந்து அண்டவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டார்.

Pin It