ஹஃபீஸ் சையீதுக்கு எதிராகப் போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில், வீட்டுக்காவல் ரத்து செய்யப்படும். – லாஹூர் நீதிமன்றம்.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஹபீஸ் சையீதுக்கு எதிராகப் போதிய ஆவணங்களைப் பாகிஸ்தான் அரசு சமர்ப்பிக்கவில்லையென்றால் அவரை வீட்டுக்காவலில் வைத்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து  செய்ய நேரிடும் என்று லாஹூர் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹஃபீஸ் சையீத் உட்பட நான்கு பேர் கடந்த ஆண்டு ஜனவரி  மாதம் 31ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இவ்வழக்கின் அடுத்த விசாரணை நாளைய தினத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Pin It