ஹந்த்வாராவில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.   

ஜம்மு-கஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் ஹந்துவாரா நகரில் ஜச்சால் தாரா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படைச் சோதனைச் சாவடி மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தியதாகவும், பாதுகாப்புப் படையினர் பதில் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், காவல்துறை உயர் அதிகாரி எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Pin It