12  ஆவது திட்ட காலத்திற்குப் பிறகும் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தைத் தொடர, அமைச்சரவைக்குழு  அனுமதி.

12  ஆவது திட்ட காலத்திற்குப் பிறகும் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு அங்கீகரித்துள்ளது. புதுதில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், 38,412 கிராமங்களில் 84,934 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் கிராம சாலைத் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் தரமான சாலை வசதியை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Pin It