13 ஆவது சர்வதேச பெட்ரோ டெக் 2019 மாநாடு – நொய்டாவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோதி துவக்கி வைக்கிறார்.         

13 ஆவது சர்வதேச எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொடர்பான பெட்ரோ டெக் 2019 மாநாட்டை நொய்டாவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோதி துவக்கி வைக்கிறார். மாநாட்டில் 95 நாடுகளின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத்துறையில் முதலீட்டாளர்களுக்கு உதவும் பல்வேறு மாற்றங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், இந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவர்..

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு துறை தொழிலதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டை ஒட்டி நடைபெறும் கண்காட்சியில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. மாநாட்டிற்கு வருவோரை வரவேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறுகையில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில் இந்தியா 3 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது என்று தெரிவித்தார். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா விளங்குகிறது என்றும், கொள்கை சீர்த்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை எட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Pin It