18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் நிர்வாகம் கைது.

பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை, இந்திய மீனவர்கள் 18 பேரைக் கைது செய்துள்ளதாக கராச்சியில் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி, பாகிஸ்தான் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டன. ஏற்கனவே இவ்வாறு கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களுடன் இந்த 18 மீனவர்களும் இணைந்து, நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படும் வரையிலோ அல்லது தண்டனைக் காலம் முடியும் வரையிலோ, கராச்சி சிறையில் அடைக்கப்படுவர்.

Pin It