2017 ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் தயாரிப்போம் கருத்தரங்கு – இந்திய ராணுவமும் இந்தியத் தொழில் கூட்டமைப்பும் இணைந்து புது தில்லியில் நடத்தின.

இரண்டாவது முறையாக, இந்திய ராணுவமும் இந்தியத் தொழில் கூட்டமைப்பும் இணைந்து புது தில்லியில், இம்மாதம் 12 ஆம் தேதியன்று புது தில்லியிலுள்ள இந்தியா ஹேபிடாட் செண்டரில், 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் தயாரிப்போம் கருத்தரங்கை நடத்தின. முன்னதாக, பாதுகாப்பு அமைச்சகம், தொழில் நிறுவனங்களுக்கு, இத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்திற்கான இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்கள் குறித்து பரிச்சயம் அளிக்க, 2016 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதியன்று முதல் கருத்தரங்கை நடத்தியது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்கள் மூலம், இந்திய ராணுவம், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகிய துறைகளில் கூட்டாகச் செயல்படும் வாய்ப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசித்தது.

Pin It