2017 ஆம் ஆண்டு, லேத்போரா தாக்குதலில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளி இர்ஷாத் அகமது ரேஷி கைது.

புல்வாமா மாவட்டத்தில் லேத்போரா கிராமத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் மீது 2017 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளி இர்ஷாத் அகமது ரேஷியை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஏ முகமது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இர்ஷாத் அகமது ரேஷி, தீவிரவாதிகளுக்குப் புகலிடம் கொடுத்த முக்கியக் குற்றவாளி என தேசிய புலனாய்வு அமைப்பான என் ஐ ஏ தெரிவித்துள்ளது.

 

Pin It