2018  ஆம் ஆண்டுக்கான ஹஜ்  யாத்திரை குறித்த புதிய கொள்கை  இந்த மாதம் வெளியிடப்படும் – மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சத் திரு முக்தார் அப்பாஸ் நக்வி.

2018  ஆம் ஆண்டுக்கான ஹஜ்  யாத்திரை குறித்த புதிய கொள்கை இந்த மாதம் வெளியிடப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சத் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஹஜ்  யாத்திரை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திரு நக்வி, புதிய கொள்கைகள் மூலம் ஹஜ் யாத்திரையின் ஏற்பாடுகள் வெளிப்படையாகவும், இலகுவாகவும் நடைபெறும் என்று கூறினார். கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நடைமுறையை மீண்டும் தொடங்குவது குறித்தும் புதிய கொள்கையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Pin It