2019-20 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தயாரிப்புக் கைப்பேசிகள் 50 கோடி என்ற அளவை எட்டும்  – தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

2019-20ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் தயார் செய்த தொலைபேசி கருவிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து  50 கோடி என்ற அளவைத் தொடும்.  புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகக் கூடுதல் செயலாளர் திரு அஜய் குமார் 2014ஆம் ஆண்டில் ஆறு கோடி, 2016-17ல் பதினேழரை கோடி மொபைல் தொலைபேசிக் கருவிகளும்   உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

2019-20ல் ஐம்பது கோடி மொபைல் தொலைபேசிக் கருவிகளை உற்பத்தி செய்ய நாடு தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.  நிகழ்ச்சியில் பேசிய உள்துறை இணையமைச்சர் திரு கிரண்  ரிஜிஜூ நாட்டின் அதிகாரமளித்தல் துறையில் மின்னணுப் பொருட்களின் பங்கினைப் பாராட்டினார்.

Pin It