37 ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது.

37 ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி புதுதில்லியில் பிரகதி மைதானத்தில் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இதனைத் தொடங்கி வைத்தார். இந்திய வர்த்த்க மேம்பாட்டு அமைப்பு 14 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிமிர்ந்து நில் இந்தியா , தொடங்கிடு இந்தியா என்பது இந்த ஆண்டு கண்காட்சியின் மையப் பொருளாக அமைந்துள்ளது.  22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7000 பங்கேற்பாளர்கள் மின்னணு சாதனங்கள் தொடங்கி ஜவுளிப் பொருட்கள் வரையிலான தங்களது உற்பத்தி பொருட்களை இதில் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த ஆண்டு வணிகத்திற்கான நாட்கள் ஐந்தில் நான்காக குறைக்கப்பட்டுள்ளது பொது மக்கள் நிறைய பேர் கண்காட்சியைப் பார்வையிடவேண்டும் என்பது இதன் நோக்கமாகும். ஒவ்வொரு நாளும் 60 ஆயிரம் பேர் கண்காட்சியைப் பார்வையிட முடியும். மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நுழைவுக் கட்டணம் இல்லை மூத்த குடிமக்கள் வயதுக்கான நிரூபணத்தையும் மாற்றுத் திறனாளிகள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் காண்பித்து எந்த வாயில் வழியாகவும் உள்ளே செல்லலாம்.

Pin It