தனி நபர் உரிமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆதார் திட்டத்தைப் பாதுகாக்கிறது. – அருண் ஜேட்லி.

அண்மையில் உச்ச நீதிமன்றம் தனி நபர் உரிமை விவகாரத்தில் நிர்ணயித்துள்ள விதிவிலக்குகள் சரியானவையாகவும், ஆதார் திட்டத்திற்கு பாதுகாப்பு அளிப்பவையாகவும் இருக்கின்றன என்று மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜேட்லி கூறியுள்ளார். இது குறித்து, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். உச்ச நீதிமன்றம், தேசியப் பாதுகாப்பு, குற்றங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் தவிர்த்தல், சமூக, பொருளாதாரச் சலுகைகள் பங்கீடு ஆகியவை குறித்து விதிவிலக்குகளை  நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார். இதில், சமூக, பொருளாதார சலுகைகள் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவித்த விதிவிலக்கு, ஆதார் திட்டத்திற்கு பாதுகாப்பு அளிப்பதற்கென்றே உருவானது என்றும் கூறினார்.

Pin It