“விவேகானந்தரின் பரந்த நோக்கு’ – குமார்.

இந்திய இளைஞர்களைத் தட்டியெழுப்பி, பயமின்மை மற்றும் வலிமை கொள்ளத் தூண்டியவர், சுவாமி விவேகானந்தர். கால் பந்து விளையாட்டின் மூலமாகவும் பகவத் கீதையை உணரமுடியும் என்று எடுத்துரைத்தவர். “விழிமின், எழுமின், இலக்கை அடையும் வரை ஓயாதிருமின்” என்று இளைஞர்களைத் தூண்டியவர். உனது எதிர்காலத்தை உருவாக்குபவன் நீயே என்றுரைத்து, அனைத்து சக்திகளும் உன்னுள்ளே உறைந்திருக்கிறது; உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஊக்குவித்தவர். உலக அரங்கில், இந்து மதத்தின் தனிப் பெருமையை நீங்காது நிலைக்கச் செய்தவர். சிகாகோ உரையின் மூலம், உலகையே வியக்க வைத்தவர்.

Pin It